வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பொதி அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வெளிநாட்டு தபால் சேவை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிகமாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 6 நாட்களாக தபால் நிலையங்களில் உள்ள கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிக்கல் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகளின் அவதானத்திற்கு உட்படுத்திய போதிலும், அதனை தீர்ப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சேவை நிறுத்தப்பட்டமையினால் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால்கள் மற்றும் பொதி நடவடிக்கைகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.