ஹட்டனில் புடவை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரின், டன்பார் வீதியில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் புடவை விற்பனை நிலையம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தை அறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த ஹட்டன் நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார், பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிமையாளர் வியாபார நிலையத்தினை பூட்டி விட்டு சென்றுள்ள சந்தர்ப்பத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.