மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தவருக்கு நேர்ந்துள்ள விபரீதம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, செங்கலடி - பதுளை நெடுஞ்சாலையின் முதிரையடி ஏற்றம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் செங்கலடி, அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மனோராஜ் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செங்கலடி அம்மன்புரத்திலிருந்து கார்மலையிலுள்ள தனது மாட்டு பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் குறித்த இளைஞர் சென்றவேளை கித்துள் கிராமத்திலிருந்து செங்கலடி நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் முதிரையடி ஏற்றம் பகுதியில் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.