மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது

Report Print Malar in சமூகம்

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட இலங்கையர் ஒருவர் உட்பட 18 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியா - பெராக், செமன்ங்கோல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 18 பேரில் ஒரு இலங்கையர், 7 வங்கதேசிகள், 3 மியான்மாரிகள், 3 இந்தோனேசியர்கள், 2 நேபாளிகள் மற்றும் 2 இந்தியர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக தகவல் கிடைத்துள்ளன.

இவர்கள் பெனாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு சென்றுக்கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விடுமுறை என்பதால் கோலாலம்பூரில் உள்ள நண்பர்களை அவர்கள் சந்திக்க சென்றதாகவும் பெராக் குடிவரவுத்துறை இயக்குனர் கமால்லுதன் இஸ்மாயில் கூறியுள்ளார்.

விசா இன்றி தங்கியது, முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் இருந்ததற்காக அவர்கள் மீது குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.