யாழில் கல்லூரி ஒன்றில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.புனித பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

கல்லூரியின் பழைய மாணவன் சிற்றம்பலத்தின் நிதியினூடாக அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தை சிற்றம்பலத்தின் பேரன் சஞ்சீவ் சிற்றம்பலம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வைத்தியர் ராஜேந்திரா, மேலும் வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், யாழ் கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலையின் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.