இறுதி கட்டத்தை நோக்கி நகரும் பிறீமியர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி! வெல்லப்போவது யார்?

Report Print Malar in சமூகம்

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஐ.பி.சி. தமிழின் பிரதான அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

அந்தவகையில், யாழ்.துரையப்பா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு பிறீமியர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் மாபெரும் இறுதி சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் ரில்கோ கென்கியூரஸ் அணி மற்றும் வல்வை எப்.சி அணி ஆகியவற்றிற்கு இடையில் பலப்பரீட்சை இடம்பெற உள்ளது.

உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வந்த நிலையில், நாளை இறுதிப்போட்டியிலும் ரசிகர்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இந்தச் சுற்றுப்போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் களமிறங்கியிருந்தன.

பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில் இப் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதோடு, ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் கூடிய போட்டியாக இந்த இறுதிச் சுற்றுப்போட்டி அமைய உள்ளது.

Latest Offers

loading...