ஊடகவியலாளரிடம் பொலிஸார் விசாரணை

Report Print Sumi in சமூகம்

சுயாதீன ஊடகவியலாளர் சோபிதனிடன் கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சோபிதன் வெளியிட்ட செய்தி தொடர்பில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இந்த விசாரணை இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் டக்ளஸ், வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலேயே அவரிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.