பரந்தனில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - பரந்தனில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவரை 5 நாட்களாக தேடி வந்த குடும்பத்தினர் வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதனை அவதானித்துள்ளனர்.

இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 29 வயதான நிதர்சன் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...