இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Report Print Sumi in சமூகம்

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 17ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் ஏ. ஜுட்சன் உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் யாழ் கடற்தொழில் நீர்வளத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் உட்படுத்திய போதே நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் 5 மீன்பிடித்த குற்றச்சாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் ஒரு நாட்டுப் படகு ஒன்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.