வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு

Report Print Theesan in சமூகம்

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை மீண்டும் பொலிஸ் விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மலைப்பகுதியில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கப்பட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது.

குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் திணைக்களத்தால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை இன்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

இந்த விசாரணைக்கு ஆலயத்தின் நிர்வாகத்தினர் சமூகமளித்துள்ளனர்.

எனினும் குறித்த விசாரணை நிறைவு பெறாத நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் அவர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...