திருகோணமலையில் சக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் கைதான வயோதிபருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வயோதிபரை இம்மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம் ஹம்ஸா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வைத்திருப்பதாக துறைமுக பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து வயோதிபரின் வீட்டை சோதனையிட்ட போது டி. என். டி என்று கூறப்படுகின்ற சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெடி பொருட்களை முல்லைத்தீவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கொண்டு வந்ததாகவும் சந்தேகநபரான வயோதிபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-அருணகிரி வீதியைச் சேர்ந்த பழனிவேல் வில்வ ராசா (61 வயது) என தெரிவிக்கப்படுகின்றது.