கொழும்பின் புறநகர் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்வையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்க செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மொரட்டுவையில் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன

மொரட்டுவ பகுதியில் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. மொரட்டுவ ரத்தாவத்த என்னும் இடத்தில் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளே இவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

விமானப் படையினர் குறித்த குண்டுகளை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்துள்ளனர். குண்டுகளை வெடிக்கச் செய்த போது எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக தகவல் கமல்....