தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக அவற்றை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், உரிய பிரதேச செயலகத்தில் உள்ள கிராம சேவகரிடம் பெறும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து திணைக்களத்திடம் சமர்ப்பிக்க முடியும். பொதுவாக நிறைவேற்றும் சேவைக்கு மேலதிகமாக அதற்காக விசேட கவுண்டர்கள் திறந்து வைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 5 இலட்சம் பேரிடம் அடையாள அட்டை இல்லை என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் அடையாள அட்டைகளை விண்ணப்பித்து வெகு விரைவில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர தேவையுடைய விண்ணப்பதாரிகளுக்கு ஒரு நாள் சேவை மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி, குருணாகல், வவுனியா, மட்டக்களப்பு உட்பட பிரதேச செயலகங்கள் மூலம் குறித்த பொதுவான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers

loading...