கொழும்பில் பொலிஸாரினால் காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் காதல் ஜோடியை மிரட்டி கப்பம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் ஜோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் 30,000 ரூபாய் வழங்குமாறு கூறி கப்பம் பெற்றுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய கல்கிஸ்ஸ பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தெற்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி 100,000 ரூபாய் பணம் கேட்ட பின்னர் இந்த ஜோடி 30,000 ரூபாய் பணம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கப்பம் பெற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...