சிவனொளிபாத மலையிலிருந்து இலங்கையின் எந்த நகரங்களை பார்வையிட முடியும்? வியப்பூட்டும் புகைப்படம்

Report Print Vethu Vethu in சமூகம்

சிவனொளிபாத மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் இலங்கையின் பல முக்கிய நகரங்களை காண முடியும் என தெரிய வந்துள்ளது.

சீரான காலநிலையில் வானம் தெளிவாக காணப்படும் போது இதற்கான வாய்ப்பு உள்ளதாக பிரபல புகைப்பட கலைஞர்கள் நிரூபித்துள்ளனர்.

மலையின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படும் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து பார்த்தால், மொரட்டுவ, இரத்மலானை விமான நிலையம், வத்தளை, சீத்தாவக்கை, ஹங்வெல்ல, நுகேகொட, கொழும்பு நகரம், பேலியகொட, தெஹிவளை, கடுவலை உட்பட பல பகுதிகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமான கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்திலிருந்து பார்த்தால் கட்டுநாயக்க விமான நிலையம், சிவனொளிபாத மலை உட்பட பல நகரங்களை பார்க்க முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...