புதையலில் சிக்கிய பெருந்தொகை தங்க நாணயங்கள்! கிரிக்கெட் நட்சத்திரத்திற்கு நேர்ந்த கதி

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஒருவரை சூட்சுமான முறையில் ஏமாற்றி 40 இலட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டமை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

புதையலில் தோண்டி எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் இரண்டு கிலோ தருவதாக கூறி வர்த்தகர்கள் குழுவொன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.

களனி குற்ற விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய தங்க நாணயம் என கூறி போலி நாணயங்களை விற்பனை செய்ய இருவர் இந்தத் தகவலை வழங்கியுள்ளனர்.

அனுராதபுரத்தில் புதையல் தோண்டியதில் கிடைத்த தங்க காசு ஒரு கிலோ 25 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் கிரிக்கெட் நட்சத்திரத்திற்கு வழங்குவதாக இந்த மோசடி கும்பல் கூறியுள்ளது. பின்னர் இரண்டு கிலோ தங்க நாணயத்திற்கு 40 லட்சம் ரூபாய் வழங்க கிரிக்கெட் வீரர் இணங்கியுள்ளார்.

கொழும்பில் இதற்கான கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கமைய தங்க நிறம் பூசப்பட்ட செப்பு காசுகளை தங்க காசுகள் என கூறி கிரிக்கெட் வீரரை ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடியாளர்களிடம் தான் சிக்கிய விடயம் வெளியே வந்தால் தனக்கு வெட்கம் என எண்ணிய கிரிக்கெட் நட்சத்திரம் இந்த விடயம் தொடர்பில் எந்த ஒரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவில்லை என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers