யுத்தம் தின்றுபோன மிச்சத்தை நோய் தின்றுகொண்டிருக்கிறது! உயிருக்கு போராடும் போராளியின் மனைவி

Report Print Kanmani in சமூகம்

நாட்டிற்காக யுத்த களத்தில் போராடி உயிர் நீத்து வீரச்சாவடைந்த போராளிகளின் குடும்பங்கள் எண்ணவோ இன்றும் தனது வாழ் நாளை கழிப்பதற்காக துன்பம் எனும் போராட்டக்களத்தில் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில், புதுக்குடியிருப்பில் வசிக்கும் வீரச்சாவடைந்த போராளி ஒருவரின் மனைவி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு உள்ளார்.

குடும்பத்தில் மூவருமே நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் இரண்டு சிறுநீரகங்களுக்கும் பாதிப்புக்குள்ளான அவருக்கு ஒரு கிழமையில் இரண்டு தடவை யாழ்.போதனா வைத்தியசாலை சென்று சிறுநீரகம் சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

அன்றாட உணவிற்கே வசதியில்லாமல் வாழும் இக்குடும்பத்திற்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான வைத்திய செலவு என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதுள்ளது.

இவர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக உங்கள் பார்வைக்கு,

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363

Latest Offers

loading...