ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! களமிறங்குகிறது இராணுவம்

Report Print Vethu Vethu in சமூகம்

இராணுவத்தினர் ரயில் சாரதியாக பணியாற்றுவதற்கு பழக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ரயில் செலுத்துவதற்கான பயிற்சியை பெற இராணுவத்தினர் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ரயில் சாரதிகளாக இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இராணுவ தளபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை அலுவலக ஊழியர்கள் ரயில் மூலம் பயணிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...