திருகோணமலை - அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - அலஸ்தோட்டம் பகுதியில் இன்று பிற்பகல் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அப் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் குளியொன்றினை தோண்டிக் கொண்டிருந்த போதே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஏ பீ 2 - 05, எஸ்.எஸ்.எம்.ஜீ.01, டி 56 துப்பாக்கி ரவைகள் 1700 மற்றும் 9 எம்.எம் துப்பாக்கி ரவைகள் 33, டி 56 மகசின் 15 ஆகிய ஆயுதங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.