சுவிட்சர்லாந்து சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி! வைத்தியசாலையில் இருந்து நெகிழ்ச்சியான பதிவு

Report Print Dias Dias in சமூகம்

சுவிட்சர்லாந்தில், அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனால் அதிர்ச்சிக்குள்ளான திருமலை இளைஞர் பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார்.

இலங்கையில் திருகோணமலை, கடற்கரை சேனையைச் சேர்ந்த இரட்ணசிங்கம் அருட்செல்வன்(33 வயது) என்பவர், கடந்த 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி தென்கிழக்காசிய நாடொன்றில் இயங்கி வரும் ஐ.நா அகதிகளுக்கான அலுவலகமொன்றில் தஞ்சமடைந்து இருந்தார்.

பின் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது அரசியல் தஞ்சக் கோரிக்கையை முன்வைத்தபோது, சுவிஸ் நாட்டு நடைமுறைகளின் படி, இவர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையிலேயே இவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் அபாய நிலைமையை எண்ணி அச்சமடைந்த இவர் திடீரென கடும் சுகவீனமடைந்தார்.

உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரோ(Aargau) மாநிலத்தில் உள்ள மருத்துவமனையொன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவரது தலைப்பகுதியில் பாரிய சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, இவரின் உடன்பிறந்தவர் ஒருவரும் மரணித்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளாகி இருக்கும் இவரை இவரது தாயார் சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துமாறு சுவிஸ் நாட்டில் இயங்கக்கூடிய தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Latest Offers

loading...