ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் வீச்சு

Report Print Varunan in சமூகம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

புதிய இலங்கையை நோக்கி எனும் தலைப்பின் கீழ் இன்றைய தினம் கல்முனை நகரப்பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சாய்ந்தமருது வீதி எங்கும் ஒட்டப்பட்டிருந்த ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சில சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.