கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட மீனவர்கள்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இது தொடர்பில் கூறுகையில்,

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்த வேகத்தில் காற்று வீசி வருகிறது. அத்துடன் நீரோட்டத்தின் தன்மையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுகின்றன.

இதனால் தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் 17ஆம் திகதி ஆழ் கடல் மீன்பிடிக்கு சென்ற காரைதீவு, மாளிகைக்காடு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...