வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரியின் கால்கோள் விழா

Report Print Theesan in சமூகம்

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா கால்கோள் நிகழ்வு இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுடன் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வடமாகாண செயலாளர் இ.இளங்கோவன், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்களான மாலினி கிருஷணானந்தன், ஜெ.தாட்சாயினி, பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீரசிங்கம் பிரதீபன், வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண ஆளுனரின் செயலாளர், சி.சத்தியசீலன், வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன், உதவிக்கல்விப் பணிப்பாளர், ஸ்ரீமதி.சுஜீவா சிவதாஸ், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பணிப்பாளர் கலாசார மத்திய நிலையம் ஸ்ரீமதி ஜெ.ஜெபராணி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...