ஹபரனை யானை மரண விசாரணைகள் தாமதம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஹபரனை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற 7 யானைகளின் மரணம் தொடர்பான விசாரணைகள் தாமதமாகியுள்ளன.

அரச பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாகவே இந்த விசாரணைகள் தாமதமாகியுள்ளன.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சு வனவிலங்குத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும் அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அந்த விசாரணைகள் தாமதமாகியுள்ளன.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக 7 யானைகள் ஒரே தடவையில் இறந்தமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான முறுகலின் ஒரு பாரிய சம்பவம் என்று கருதப்படுகிறது.

Latest Offers

loading...