நாளாந்த வருமானம் 8 கோடி ரூபாவா? இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 85 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் தொடர் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவும், வார இறுதியிலும் அதிகளவான பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணித்துள்ளனர். இதன் காரணமாக வருமானம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, தங்கள் கோரிக்கைக்கு பதில் கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Latest Offers

loading...