சம்மாந்துறையில் விபத்து: ஒருவர் பலி

Report Print Varunan in சமூகம்

சம்மாந்துறையில் தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்மாந்துறை - நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நிந்தவூரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers