வவுனியா பிரபல பாடசாலையில் சத்துணவில் திருட்டா? வெளிவரும் காரணங்கள்

Report Print Malar in சமூகம்

வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முட்டை உள்ளடங்கலான சத்துணவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் முட்டை, மரக்கறி வகைகள் போன்ற சத்துணவுகளின் கொள்வனவிலும் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் வியாபார நிலையத்தினர் இணைந்து நிதி மோசடி மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், தேசிய கணக்காய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதுடன், இந்த விடயம் தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சத்துணவு பொருட்களின் கொள்வனவில் பற்றுச்சீட்டுக்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் அரசாங்கத்தினால் பாடசாலைகள் ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவுகளில் பல முறைகேடுகள் நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வவுனியா பாடசாலையின் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணையின் முடிவுக்காக பாடசாலை சமூகமும், பெற்றோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Latest Offers

loading...