கோத்தபாயவினால் ஆசியாவின் ஆச்சரியத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

Report Print Vethu Vethu in சமூகம்

ஆசியாவின் ஆச்சரியமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்விளக்குகளை நிறுத்துமாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

தாமரை கோபுரத்தில் இரவில் ஒளிரும் விளக்குகளை அணைத்து விடுமாறு தேர்தல் ஆணைக்கழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.

கோத்தபாய ராஜபக்ச போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னம் தாமரை மொட்டாகும். இதனால் தாமரை கோபுரம் கோத்தபாயவுக்கு சார்பாக அமைந்து விடும்.

இதனால் அது பிரச்சார நடவடிக்கை போன்று காணப்படும் என சுயாதீனமான போட்டியிடும் வேட்பாளர் ஒருவரினால் முறைப்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.