வெள்ளவத்தை பாமன்கடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை, W.A.சில்வா மாவத்தையைச் சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விபத்து காரணமாக படுகாயம் அடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.