கல்லறைகளை உடைத்து சடலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன

Report Print Steephen Steephen in சமூகம்
1229Shares

வெலிகமை நகர சபைக்கு சொந்தமான மூதுகமுவ மயானத்தில் இருக்கும் கல்லறைகளை உடைத்து, சடலங்களின் பாகங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வெலிகமை நகர சபை உறுப்பினர் பீ.கே.சி. விமலசூரிய தெரிவித்துள்ளார்.

பொது மயானத்தில் உள்ள சில கல்லறைகளை உடைத்து உடல் பகுதிகளை எடுத்துச் செல்லும் சட்டவிரோத வர்த்தகம் முன்னெடுக்கப்படுவது சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிருடன் இருக்கும் ஒருவரை அகௌரவப்படுத்தினால், அதற்காக மன்னிப்பு கோரலாம். எனினும், இறந்தவர்களுக்கு நடக்கும் அகௌரவத்திற்கு நகர சபை நிர்வாகம் பொறுப்புக் கூற வேண்டும்.

மயானத்திற்குள் கழிவு நீரை கொட்டி, அந்த சுற்றாடலை நகர சபை அசுத்தப்படுத்தி வருகிறது எனவும் விமலசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.