முல்லைத்தீவில் பாடசாலைக்கு முன்பாக விபத்து! மாணவன் பலி

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய், பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது வாகனமொன்று மோதியமிமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்தனர். பொலிஸார் இவ்விபத்தை ஏற்படுத்திய நபருக்கு சாதகமாக செயற்படுவதாக அம்மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் 11 வயதுடைய செல்வரத்தினம் கேதீஸ் எனத் தெரியவருகின்றது.