வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று காலை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா - வேப்பங்குளம், சின்னங்குளம், ஓமந்தை போன்றப் பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், சமுர்த்தி வங்கிகளுக்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Offers