வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட வெளிநாட்டு அகதிகள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூந்தோட்டம், நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று காலை நீர்கொழும்பிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 113 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு ஒரு தொகுதியினர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர்.

இதன் பின்னர் ஐவர் மாத்திரமே பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கி இருந்த நிலையில், அவர்களும் தமது சுயவிருப்பில் செல்ல விருப்பம் தெரிவித்திருந்ததின் அடிப்படையில் அவர்களும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.