ரயில் தண்டவாளத்தில் குடும்பத்தை காப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியையும், மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை - அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என்.ஜோஹான் ஜோசப் எனத் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.