கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட இந்த தாழிறக்கம் காரணமாக ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.

பள்ளமான பகுதியில் வீதி கீழிறங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.