விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் யாழ். இளைஞர் ஒருவர் கைது!

Report Print Theesan in சமூகம்
526Shares

விடுதலை புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கபட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கடைமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடமிருந்து விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கபட்ட தொப்பி, சீருடை ஒன்றும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யபட்டதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.