கம்பளை பகுதியில் கடந்த முதலாம் திகதி காணாமல் போன ஆசிரியையின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் சூழியோடிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்றிரவு இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் ஆசிரியையின் பெற்றோரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தலாத்துஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.