வவுனியா சைவப்பிரகாச பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி

Report Print Thileepan Thileepan in சமூகம்
185Shares

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் 26 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் பி.ஐதுர்ஷி 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதல் நிலையை வகிப்பதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் வெட்டுப்புள்ளிக்கும் 100க்கும் இடைப்பட்ட புள்ளிகளை 72 மாணவர்களும், 70-100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 17 மாணவர்களும், 70க்கு கீழ் புள்ளிகளை 04 மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை

சம்மாந்துறை வலயத்தில் 191 புள்ளகளைப்பெற்று முதலிடத்திலிருக்கும் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி ஆர் ஆயிஷா ஹனீன் வலயக்கல்விப்பணிமனையால் பாராட்டப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு நேரடியாகச் சென்று மாணவியைப் பாராட்டியுள்ளனர்.

ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் வலயக் கல்விப் பணிப்பாளரது" All children Pass Project" திட்டம் வெற்றியடைந்தமையினாலும் 9 மாணவர்கள் இப்பாடசாலையில் சித்தியடைந்துள்ளதுடன், வலயத்தில் 203 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்று கிழக்கு மாகாணத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளது.

கிளிநொச்சி

தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலய மாணவன் இராசலிங்கம் கேதுசனன் 194 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையையும் வடமாகாணத்தில் இரண்டாம் நிலையையும் பெற்றுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தைச் சேர்ந்த இராசலிங்கம் கேதுசனன் 194 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையையும் வடமாகாணத்தில் இரண்டாம் நிலையையும் பெற்றுச் சாதனை நிலை நாட்டியுள்ளார்.

இப்பாடசாலையில் மேலும் மூவர் குறித்த நிலைப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர். சந்திரகுமார் கபிலன் 183 புள்ளிகளையும் ஞானப்பிரகாசம் சன்சிகா 168 புள்ளிகளையும் இராமநாதன் கஜானி 162 புள்ளிகளையும் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.