களுதாவளைக் கடலில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவரை காணவில்லை

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு கடலில் காணாமல் போனவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரம் டிலான் என தெரியவந்துள்ளது.

களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நீராடச் சென்ற நிலையில் கடலலையில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளதுடன், கடற்படையினர்,மீனவர்களும், உறவினர்கள் ஆகியோர் தொடர்ந்தும் கடலில் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்க்து.