கோத்தபாயவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Murali Murali in சமூகம்

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி இவர்கள் இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த மனு அண்மையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையிலேயே, தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர கருத்து வெளியிடுகையில்,

“தாக்குதல் மற்றும் வெள்ளை வான் ஆகியவற்றை நினைவுபடுத்தல், வியங்கொட என்ற பெயருக்குப் பதிலாக எக்னெலிகொடவின் பெயரை நினைவுபடுத்தல் ஆகிய விடயங்கள் எனக்கும் காமினிக்கும் எதிராக இடம்பெறுகின்றன.

இயற்கை உயிரிழப்பு கிடைக்காமை குறித்து கவலையடைவதாகவும் கூறப்படுகின்றது. நாம் முன்னெடுக்காத மற்றும் எம்மால் பதிலளிக்க முடியாத விடயங்கள் குறித்து அவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர்.

பிரஜைகளின் உரிமைக்காகவே நாம் செயற்பட்டோம். அந்தப் பிரஜைக்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், அதனை நீதிமன்றத்திலோ அல்லது வேறு எங்குமோ கேட்க முடியும்.

நாம் நீதிமன்றத்தை நாடியமை குறித்தே இங்கு பிரச்சினையுள்ளது. நாம் நீதிமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுள்ளது. அதற்கு நீதிமன்றம் பதில் வழங்கியுள்ளது. அதனை ஏற்றுக்கொள்வதில்லை.” அவர் கூறியுள்ளார்.

Latest Offers