முல்லைத்தீவில் இரவோடு இரவாக பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Report Print Mohan Mohan in சமூகம்

ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் படங்களுடனான சுவரொட்டிகள் முல்லைத்தீவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேசத்தின் வெற்றி என கோத்தபாயவின் புகைப்படங்களுடனான சுவரொட்டிகளும், புதிய இலங்கைக்கு சஜித் என சஜித்தின் புகைப்படங்களுடனான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான சுவரொட்டிகள் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த தேர்தல் விளம்பர சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த ஏழாம் திகதி முதல் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கட்பட்டது.

அத்துடன், வாகன அல்லது மக்கள் பேரணிகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.