புதுக்குடியிருப்பில் காணாமல் போயுள்ள பிரபல தற்காப்பு கலை ஆசிரியர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல தற்காப்பு கலை ஆசிரியர் காணாமல் போயுள்ளார்.

குறித்த ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், இன்றுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதி பகுதியில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.