பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு மூதூர் மக்கள் கோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மூதூர் நகர் பகுதியையும் வேதந்தீவு கிராமத்தையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறித்த பகுதியில் தரைவழி போக்குவரத்து இல்லாமையினால் மக்கள் வேதந்தீவு களப்புக் கடலின் ஊடாக சுமார் 50 மீற்றர் தூரம் சிறியரக படகு மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

வேதந்தீவு கிராமத்தில் வைத்தியசாலை இல்லாமையினால் அங்கிருந்து மூதூர் வைத்தியசாலைக்கு செல்லும் அவசர நோயாளர்களை கொண்டு செல்வோரும் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்குகின்றனர். அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்கள், வயல் நிலங்களுக்கு செல்வோர் உட்பட நோயாளர்களும் படகு மூலமே பயணம் செய்கின்றனர்.

இதன் காரணமாக, வேதந்தீவு கிராமத்தையும் மூதூர் நகர் பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.