குளிக்கச் சென்ற இளைஞன் கடலில் மாயம்!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - களுதாவளை கடற்பகுதியில் நேற்று மாலை குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

தனது 5 நண்பர்களுடன் கடற்கறைக்கு சென்று விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ள குறித்த இளைஞன் கடல் அலையில் சிக்குண்டுள்ளார்.

இதனை அவருடைய சக நண்பர்கள் கடற்படையினரிடம் அறிவித்துள்ளதையடுத்து, மீனவர்களும், கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்த இளைஞனின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...