அதிகூடிய நிறையுடைய கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை

Report Print Mohan Mohan in சமூகம்

இலங்கையில் அதிகூடிய நிறையுடைய கட்டியை சத்திரசிகிச்சை செய்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது.

சத்திரசிகிச்சை நிபுணர் ரவிந்திரன் தலைமையிலான வைத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் சுமார் 2 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சையினை மேற்கொண்டிருந்தனர்.

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ கிராம் நிறையுள்ள கட்டியொன்றினை அகற்றி இந்த சத்திரசிகிச்சையினை செய்துள்ளனர்.

இந்த சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்களான பீ.கே.இரவீன்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து வைத்திய நிபுணர் ருவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திரசிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Latest Offers

loading...