பலாலி சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
263Shares

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை நாங்கள் குறுகிய காலத்தில் நிறைவு செய்தோம்.

பலாலி விமான நிலையம் தற்போது சர்வதேச விமான நிலையம். பிராந்திய ரீதியிலான விமான சேவைகளை ஆரம்பிக்க நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம்.

விரைவில் விமான நிலையத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

உலகில் உள்ள மிகப் பெரிய விமானங்களை பலாலியில் தரையிறக்க முடியும். 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், விமான சேவைகளுக்காக நாங்கள் பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம்.

முதல் கட்டமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவுப்படுத்தினோம்.

இதனை தவிர மட்டக்களப்பு விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக மாற்றினோம்.

சீகிரிய, திருகோணமலை, ஹிங்குராக்கொட விமான நிலையங்களை விமானப்படையின் உதவியுடன் சிவில் விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய உள்ளோம்.

கண்டியில் புதிய விமான நிலையத்தை நிர்மாணிக்க தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் உள்நாட்டு விமான சேவைகளை நாங்கள் வலுப்படுத்த உள்ளோம்.

நாட்டுக்கு உள்நாட்டு விமான சேவை அவசியம். சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இது உதவியாக இருக்கும் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.