அம்பாறையில் முதன்முறையாக சிக்கிய கஜமுத்துக்கள்! இவற்றின் பெறுமதி கோடி ரூபா

Report Print Mubarak in சமூகம்

சாய்ந்தமருதில் கஜ முத்துக்கள் அடங்கிய பொதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30), மீரா முகைதீன் முகமட் சலீம்(வயது-39) ஆகியோர் 3 முத்துக்களுடன் செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஜமுத்துக்களின் பெறுமதி 1 கோடி 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.