முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் தங்கம், ஆயுதங்களை தேடி அகழ்வு!

Report Print Vanniyan in சமூகம்

இறுதிப்போர் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தங்கம், ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவம் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை.

கடந்தவாரமும் இதே பகுதியில் இரண்டு தடவை அகழவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் நிறைவடைத்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் அகழ்வு மேற்கொண்ட போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...