முல்லைத்தீவு மாவட்டத்தில் 75,381 பேர் வாக்களிக்க தகுதி

Report Print Mohan Mohan in சமூகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 75,381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் இன்று தெரிவித்துள்ளார்.

இதன்படி மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 15 வாக்களிப்பு நிலையங்களில் 5372 பேர், துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 7458 பேர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 23626 பேர்,கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 49 வாக்களிப்பு நிலையங்களில் 24237 பேர் ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 26 வாக்களிப்பு நிலையங்களில் 11325 பேர், மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 5 வாக்களிப்பு நிலையங்களில் 3363 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தமாக 135 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 75381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.