இந்தியாவின் பங்களிப்பினால் முன்னேற்றமடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் இந்தியாவின் பங்களிப்பினால் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்திய நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வர்த்தக சுற்றுலாக்கள், பல்வேறுதுறை சார்ந்த மாநாடுகள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றுக்காக இந்தியர்கள் இலங்கையில் விருந்தகங்கள் மற்றும் மண்டபங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.

இவற்றில் இருந்து பெருமளவு வருமானம் இலங்கைக்கு கிடைத்து வருகிறது.

இதில் முக்கியமாக போஹ்ரா சமூகத்தின் மாநாடு கடந்த செப்டம்பரில் கொழும்பில் நடத்தப்பட்ட போது அதன் மூலம் 50 மில்லியன் டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டது.

இதன்போது போஹ்ரா இனத்தவர்கள் 24ஆயிரம் பேர் இலங்கை வந்திருந்தனர்.

இதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்குமானால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படாது என்று இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.